Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' படம் பார்க்க சென்றதால் நிகழ்ந்த சோகம்..... தாயை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு!

‘புஷ்பா 2’ படம் பார்க்க சென்றதால் நிகழ்ந்த சோகம்….. தாயை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு!

-

- Advertisement -

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. எனவே அதற்கு முந்தைய நாள் டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.'புஷ்பா 2' படம் பார்க்க சென்றதால் நிகழ்ந்த சோகம்..... தாயை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு! இதனைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் சந்தியா திரையரங்கிற்கு வருகை தந்தார். அப்போது அவரைக் காண ரசிகர்கள் பலரும் தியேட்டருக்குள் திரண்டு வந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் ரேவதி (வயது 35) என்ற பெண் ஒருவர் பலியானார். அதே சமயம் அவருடைய 9 வயது மகன் ஸ்ரீ தேஜ் மயக்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கில் அல்லு அர்ஜுன், திரையரங்க உரிமையாளர், மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன், உயிரிழந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். 'புஷ்பா 2' படம் பார்க்க சென்றதால் நிகழ்ந்த சோகம்..... தாயை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு!இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் உயிரிழந்த பெண்ணின் மகன் ஸ்ரீ தேஜ், கிம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அந்த சிறுவன் ஸ்ரீ தேஜ் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழந்துள்ள தகவல் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ