Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் பிறந்தநாள் இன்று.... 'ட்ரெயின்' பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

விஜய் சேதுபதியின் பிறந்தநாள் இன்று…. ‘ட்ரெயின்’ பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

-

- Advertisement -

விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் சேதுபதியின் பிறந்தநாள் இன்று.... 'ட்ரெயின்' பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து வெளியான விடுதலை 2 திரைப்படமும் விஜய் சேதுபதிக்கு வெற்றியை தந்துள்ளது. இதற்கிடையில் நடிகர் விஜய் சேதுபதி, மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். டார்க் திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து டிம்பிள் ஹயோதி, வினய் ராய், சம்பத்ராஜ், கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இயக்குனர் மிஸ்கின் இந்த படத்தில் இசையமைப்பாளரகவும் பணியாற்றியுள்ளார். பௌசியா பாத்திமா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி 2025 மார்ச் மாதத்தில் படம் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் 47 ஆவது பிறந்தநாள இன்று (ஜனவரி 16) ட்ரெயின் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ