ரஜினி பிறந்தநாள் அன்று அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கிடைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்பாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் கமிட்டானார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு ஏறத்தாழ 90% நிறைவடைந்த நிலையில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்த அடுத்த போஸ்டர்களும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அடுத்ததாக இந்த படத்திலிருந்து முதல் பாடல் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. அதன்படி நாளை (டிசம்பர் 12) விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எந்த அறிவிப்பும் இல்லாமல் டீசர் வெளியான நிலையில் முதல் பாடலும் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கிடைக்கப் போகிறது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.