நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் 2025 ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சிம்பு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. அதே சமயம் சிம்பு, ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இதுவரை தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் தான் நடிகர் சிம்பு, பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் கதை கேட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் தக் லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு உடனடியாக இந்த படத்தில் நடிக்கப் போவதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை தனுஷின் இட்லி கடை படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் ,தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -