Homeசெய்திகள்சினிமா'STR 49' படத்திற்கு இசையமைக்க மறுத்த ட்ரெண்டிங் இசையமைப்பாளர்.... அப்செட்டில் சிம்பு!

‘STR 49’ படத்திற்கு இசையமைக்க மறுத்த ட்ரெண்டிங் இசையமைப்பாளர்…. அப்செட்டில் சிம்பு!

-

- Advertisement -

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தனது சிறுவயதிலிருந்தே நடிக்க தொடங்கியவர். அந்த வகையில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 'STR 49' படத்திற்கு இசையமைக்க மறுத்த ட்ரெண்டிங் இசையமைப்பாளர்.... அப்செட்டில் சிம்பு!தற்போது இவர், தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இதைத்தொடர்ந்து தனது 49, 50, 51 ஆகிய மூன்று படங்களிலும் நடிப்பதற்க ஒப்பந்தமாக இருக்கிறார். இதில் ‘STR 49‘ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானம், சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2025 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் இந்த படத்தில் சாய் அபியங்கர் இசையமைப்பாளராக பணியாற்றப் போகிறார் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது. அதாவது முதலில் இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத்தை படக்குழு அணுகியதாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் அனிருத் இந்த படத்தில் இசையமைக்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. 'STR 49' படத்திற்கு இசையமைக்க மறுத்த ட்ரெண்டிங் இசையமைப்பாளர்.... அப்செட்டில் சிம்பு!அதுமட்டுமில்லாமல்அனிருத் ‘STR 51’ படத்திற்கும் இசையமைக்க மறுத்துவிட்டாராம். எனவே படக்குழுவினர் சிம்புவின் 49வது படத்திற்கும் 51வது படத்திற்கும் சாய் அபியங்கரை படக்குழு தேர்வு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நடிகர் சிம்பு, அனிருத்தின் இந்த செயலால் அப்செட்டில் இருப்பதாக தொடர்ந்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

MUST READ