Homeசெய்திகள்சினிமாமுன்னனி நடிகையாக வளம் வரும் த்ரிஷா

முன்னனி நடிகையாக வளம் வரும் த்ரிஷா

-

முன்னனி நடிகையாக வளம் வரும் த்ரிஷா
கோலிவுட்டின் மார்க்கண்டேயன் என நடிகர் சிவகுமாரை சொல்வார்கள். ஒரு நடிகைக்கு இப்பட்டம் கொடுத்தோமானால் அதற்கு சரியான சாய்ஸ் நடிகை த்ரிஷா மட்டுமே.

ஆம் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் முன்னணி நடிகை என்ற இடத்தில் ஒய்யாரமாய் அமர்ந்திருப்பவர் நடிகை த்ரிஷா.

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அண்ணி, அக்கா, குடும்பத் தலைவி வேடங்களுக்கு மாறிவிட வேண்டிய சூழலில் இன்றும் முன்னணி நட்சத்திரங்கள் இயக்குனர்கள் படங்களில் நாயகியாக நடித்து என்றும் பதினாறு என பெயர் பெற்றவர் த்ரிஷா.

22 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே லைன் லைட்டில் நிற்கிறார் என்றால் நம்ப முடியாது தான். இந்த அசாத்தியத்தை தனது விடாமுயற்சியால் சாத்தியமாக்கி 100 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் ஆச்சரியநாயகியாக வளம் வரும் த்ரிஷா ஒரு பேர அதிசயமே.

மாடலிங் துறையில் அதித ஆர்வம் கொண்டிருந்த த்ரிஷா 1999 ஆம் ஆண்டு மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதே அவரின் சினிமாவுக்கான நுழைவுச் சீட்டாக அமைந்தது.

மாடலிங், விளம்பரம் என கொடிகட்டி பறந்து கொண்டிருந்த த்ரிஷாவின் முதல் வெள்ளித்திரை அறிமுகம் ஜோடி படத்தின் மூலம் சாத்தியமானது. தன்னுடைய 16 வயதில் தமிழ் சினிமாவின் அன்றைய முன்னணி நாயகியான சிம்ரனின் தோழியாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து போனார் த்ரிஷா.

விளம்பரங்களில் துருதுரு என நடித்து வந்த த்ரிஷாவின் மீது முன்னணி இயக்குனர் பிரியதர்ஷினின் பார்வை விழ உடனடியாக தான் இயக்கம் லேசா லேசா படத்தில் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

த்ரிஷா

முதல் படத்திலேயே முழுக்க முழுக்க தன்னை சுற்றி கதை அமைவது போல் அழுத்தமான பாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டது. இப்படத்தின் பாடல்களில் நாயகன் ஷாமுடன் தோன்றும் த்ரிஷாவின் அழகு திரையரங்கிலும் காதல் மழை பொழிய செய்தது.

லேசா லேசா படம் வெளியிட்டில் தாமதம் ஏற்பட அமீர் இயக்கத்தில் அவர் நடித்த மௌனம் பேசியதே அவருடைய அறிமுக படமாக வெளியானது.

த்ரிஷா

இப்படத்தின் ஒரு காட்சியில் தனியாக பேச வேண்டும் என சூர்யா கேட்டதும் “தனியாவா பேசலாமே” என சொல்லும் த்ரிஷாவின் உடல் மொழி அன்றைய இளைஞர்களிடம் தனி கவனம் பெற்று அவரை பிரபலப்படுத்தியது.

மௌனம் பேசியதே நல்ல அறிமுகம் கொடுத்தது என்றால் அடுத்து வெளியான சாமி அவரை பட்டித்தொட்டி வரை கொண்டு சேர்த்தது. முதல் பாதியில் தாவணியில் வலம் வரும் கல்லூரி மாணவியாகவும் இரண்டாம் பாதியில் அன்பான மனைவியாகவும் வரும் புவனா என்னும் அந்த கதாபாத்திரம் த்ரிஷாவை ஒரேடியாக அன்றைய இளைஞர்களின் ஆதர்ச நாயகியாக மாற்றியது.

த்ரிஷா

மௌனம் பேசியதே, சாமி என ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த த்ரிஷாவின் கேரியரை அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு நகர்த்திய படமானது கில்லி.

பிரகாஷ் ராஜிடம் இருந்து தப்பித்து விஜய் இடம் தஞ்சம் போகும் தனலட்சுமி எப்படியாவது விஜய் காப்பாற்றி விட வேண்டும் என படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்கனையும் பதறவைத்து கைதட்டுகளை அள்ளியது த்ரிஷாவின் நடிப்பு.

இப்படத்தின் ‘அப்படி போடு’ பாடல் அன்றைய கொலை வெறியாக தமிழ் தேசம் தாண்டி ஒட்டுமொத்த தேசத்திலும் ஹிட் அடித்தது த்ரிஷாவின் பெயரையும் இந்தியா முழுக்க பரப்பியது.

த்ரிஷா

அன்றைய தேதியில் தமிழில் முன்னணி நாயகிகளாக பலம் வந்த சிம்ரன், ஜோதிகா ஆகியோரை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் அந்தஸ்தையும் த்ரிஷாக்கு பெற்று தந்தது கில்லி. தொடர் வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களின் நம்பர் ஒன் சாய்சாக மாறினார் த்ரிஷா.

அந்த வகையில் தான் அறிமுகமான இரண்டே வருடத்தில் மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற த்ரிஷா அப்படத்தில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடித்து அதிலும் வசீகரித்தார்.

தமிழ் படங்களின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு உலகில் அறிமுகமான த்ரிஷா அங்கும் தனது முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரையை பதித்தார்.

பிரபாஸ் ஜோடியாக அவர் அறிமுகமான வருஷம் படம் அவருக்கு தெலுங்கிலும் பெரும் ரசிகர் படையை உருவாக்கியதுடன் ஃபிலிம் ஃபேர் உட்பட ஏராளமான விருதுகளை பெற்று தந்தது.

அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நம்பர் ஒன் நாயகியாக உருவெடுத்த த்ரிஷாவை தேடி கூடவே சர்ச்சைகளும் பின் தொடர ஆரம்பித்தன.

த்ரிஷா

திரையில் அவருடைய காரியர் ஏறு முகத்தை சந்திக்க திரைக்கு பின்னால் அவரை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் வட்டமளிக்க தொடங்கின.

21 வயதிலேயே இமாலய வெற்றியை ருசித்த த்ரிஷா அதே வேகத்தில் தன்னுடைய பர்சனல் வாழ்க்கையில் சில பிரச்சனைகளையும் சந்தித்தார்.

ஆனால் அந்தச் சூழலை மிக கவனமாக கையாண்டு த்ரிஷா தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கெல்லாம் திரையில் பதில் சொல்லி தொடந்த முன்னணி நாயகியாக ஜொலித்தார்.

கில்லி வெற்றியை தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி என அடுத்தடுத்து விஜயுடன் கூட்டணி அமைத்த திரிஷா பாடல் காட்சிகளில் அவருக்கு இணையாக ஈடு கொடுத்து ஆடி ஆசத்தினார்.

சிம்ரனுக்கு அடுத்து சிறப்பான நடன ஆசைகளை வெளிப்படுத்திய தமிழ் நாயகிகளில் ஒருவராக இன்றும் த்ரிஷா வளம் வருவதை பார்க்கலாம்.

ஒரு பக்கம் விஜய், அஜித் போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் டூயட் பாடல்களில் ஆடி பாடும் இடங்களில் நடித்து வந்த த்ரிஷா இன்னொரு பக்கம் உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார்.

நாளடைவில் எந்த படமாக இருந்தாலும் அதில் யார் ஹீரோவாக இருந்தாலும் த்ரிஷாவின் நடிப்பு தனித்து பேசப்பட தொடங்கியது.

ஹீரோக்களை முன் நிலைப்படுத்திய படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்து வந்த த்ரிஷா தன்னால் ஒரு முழு படத்தையும் தன் தோளில் சுமக்க முடியும் என நிரூபித்த படம் அபியும் நானும். தந்தைக்கும் கணவருக்கும் இடையே தவிக்கும் பெண்களின் மனப் போராட்டங்களை நேர்த்தியாக திரையில் பிரதிபலித்த த்ரிஷா நாயகிகளை மையப்படுத்திய படங்கள் அதிகம் வெளிவராத அந்த காலகட்டத்திலேயே ஒரு நாயகியாக தனது ஆளுமையை பறைசாற்றினார்.

எந்த ஒரு நாயகிக்கும் பெயர் சொல்லும் ஒரு படம் அவர்களுடைய கேரியரையே அலங்கரிக்கும். அந்த வகையில் த்ரிஷாவின் கேரியரில் ஒரு மைல் கல் படமாக இன்று வரை கொண்டாடப்படும் ஒரு படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

த்ரிஷாவை உருகி உருகி காதலிக்கும் வேதத்தில் சிம்பு நடித்திருந்தாலும் அவரை விடவும் ஜெஸ்ஸியை உருகி காதலித்தனர் தமிழ் ரசிகர்கள்.

வசன உச்சரிப்பில் தொடங்கி ஹேர்ஸ்டைல், புடவை என விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசி செய்தது அனைத்தும் அன்றைய தேதியில் டிரெண்டாக மாறியது.

இப்படம் திரைக்கு வந்து பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் இன்றும் சமூக வலைதளங்களில் ஜெஸ்ஸியின் சாயலில் பல பெண்களை காண முடியும்.

தனது கரியரில் ஆல் டைம் பெஸ்ட் கதாபாத்திரத்தை கொடுத்த த்ரிஷாவுக்கு அதே வேகத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ஜோடியாக மன்மதன் அன்பு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக சீனியர் நடிகர் கமலுடன் ஜோடி சேர்ந்தவுடன் அப்படத்தில் தன் சொந்தக் குரலில் பாடி ஒரு பாடகியாக அறிமுகமானார்.

விஜய் போலவே அஜித் த்ரிஷா ஜோடியும் கோலிவுடில் பிரபலமானது. அதோடு அஜித் தான் த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்த நடிகரும் கூட என்று ஆனது. ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் என நான்கு படங்களில் அஜித் உடன் இணைந்து நடித்த த்ரிஷா தான் சந்தித்த நடிகர்களில் அஜித் மிகவும் ஜென்டில்மேன் என பல இடங்களில் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னணி நாயகி ஆக இருந்தால் நட்புக்காக சில படங்களில் நடிப்பது த்ரிஷாவின் ஸ்பெஷல். அஜித்திற்காக அவருடைய ஐம்பதாவது படமான மங்காத்தாவில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா கௌதம் மேனனுக்காக என்னை அறிந்தால் படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக தயக்கம் இன்றி நடித்துக் கொடுத்தார்.

அறிமுகமான ஆண்டிலிருந்து சராசரியாக வருடத்திற்கு நான்கு படங்கள் என நடித்து வந்த த்ரிஷாவின் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான தூங்காவனம் ஐம்பதாவது படமாக வெளிவந்தது.

ஒரு நாயகி 50 படங்களில் நடிப்பது என்பதே தமிழ் சினிமாவில் ஆச்சரியமான ஒரு விஷயம். ஆனால் 50-வது படம் நடிக்கும் போதும் த்ரிஷா முன்னணி நாயகியாகவே இருந்தது கூடுதல் ஆச்சரியமானது ஒன்று.

15 ஆண்டுகள் ஹீரோயினாக கோலோச்சிய ஒரு நாயகி வில்லியாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என தயக்கம் இருக்கும். ஆனால் இந்த சவாலை அனாயசமாக கடந்த த்ரிஷா கொடி படத்தில் ருத்ரவாக மிரட்டலான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீப காலமாக தமிழில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகளவில் வெளியாகி வரும் நிலையில் அது த்ரிஷாவின் பங்களிப்பும் அலாதியானது. நாயகி, மோகினி, கர்ச்சனை, பரமபத விளையாட்டு என கிட்டத்தட்ட அரை டஜன் படங்கள் திரிஷாவை மட்டுமே முன்னிலைப்படுத்தி தயாராகின.

தமிழ், தெலுங்கை தாண்டி தனது குருநாதர் பிரியதர்ஷினிக்காக ஹிந்தியில் அறிமுகமான த்ரிஷா அண்மையில் மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக ஹே ஜூட் படத்திலும் அறிமுகமானார்.

அடுத்தடுத்த படங்களில் நடித்தால் விண்ணைத்தாண்டி வருவாயா அளவு பேர் சொல்லும் ஒரு படம் இல்லையே என வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்களுக்கு 96 படம் மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்து அசத்தினார் த்ரிஷா.

த்ரிஷாவின் வாழ்நாள் கதாபாத்திரம் ஜெஸியா ஜானுவா என விவாதிக்கும் அளவு ஜானுவின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றால் இவர். படம் முழுக்க இரண்டே உடைகள் ஒரே இரவில் பயணிக்கும் கதை என பல சவால்கள் இருந்தாலும் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை கட்டிப்போட்டது த்ரிஷாவின் பேரழகு.

கண் பேசும் மொழியை திரைமொழியாக்கி த்ரிஷா நடித்த விதம் ஒட்டுமொத்த ரசிகனுக்கும் தன் கடந்த கால காதலை நினைவுபடுத்திச் சென்றது.

தென்னக சினிமாவின் அத்தனை முன்னணி நாயகர்களுடன் நடித்து விட்டாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததில்லை என்ற த்ரிஷாவின் குறையும் தீர்ந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஸ்டாரின் நாயகியும் ஆனார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் தன் நடிப்பாலும் வசீகராதாலும் புதிய உச்சத்தை தொட்டார் திரிஷா.

பேரழகும் சாதுரியமும் நிறைந்த இளவரசி குந்தவையாய் சினிமா ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தார் த்ரிஷா.

த்ரிஷா

கப்பலில் பின்னணியில் கதிரொளி தெறிக்க த்ரிஷா நிற்கும் காட்சியில் அவரிடம் காதல் வயப்பட்டது வந்தியத்தேவன் மட்டுமல்ல ஒட்டு மொத்த பார்வையாளர்களும் தான் என்னும் அளவிற்கு பொன்னியின் செல்வனுக்குப் பின்னர் த்ரிஷாவை இன்னும் உயரத்தில் வைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

அடுத்து ராங்கி படத்திலும் நடித்த கலக்கினார் தனித்துவ நாயகி த்ரிஷா. ராங்கி என்னும் போல்டான பூச்சுடன் அரசியல் ராங்கியாக அசத்தினார் த்ரிஷா. கொஞ்சம் கிரே சேடு கலந்த அதே சமயம் அரசியல் ரீதியாக பண்ணப்பட்ட ஓர் ஆழமான பாத்திரத்தை கச்சிதமாக உள்வாங்கி பக்கா மாஸ் காட்டி கொண்டாடப்பட்டார் த்ரிஷா.

ஒரு நாயகியாக பத்து ஆண்டுகள் நீடிப்பதே பெரும் சிரமம் என்ற நிலை நீடிக்கும் இந்திய சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி 21 வது ஆண்டிலும் உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தனக்கென முத்திரை பதிந்து வருகிறார் த்ரிஷா.

த்ரிஷா

முதல் படமான மௌனம் பேசியதே சந்தியாவில் தொடங்கி கில்லி தனலட்சுமி, அபியும் நானும் அபி, விண்ணைத்தாண்டி வருவாயாவில் ஜெஸ்ஸி, 96 இல் ஜானு, பொன்னியின் செல்வன் குந்தவை என இத்தனை வருடங்களில் த்ரிஷா நடித்த படங்களில் நிச்சயம் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு கேரக்டர் ஆவது நம்மை நினைக்க வைக்கும்.

இப்போது விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்கிறார் நடிகை த்ரிஷா.

அடுத்து பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து விஜயுடன் சேரும் படம் என 2023 ஆம் ஆண்டிலும் கலக்க காத்திருக்கிறார் தென்னிந்தியாவின் செல்ல ஹீரோயின் த்ரிஷா.

நாயகியாக அறிமுகமாகி 21 வது ஆண்டில் பயணிக்கிறார் த்ரிஷா. அவரை இன்னும் உச்சத்தில் வைத்த கொண்டாட காத்திருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் ‌‌.

MUST READ