Homeசெய்திகள்சினிமாமூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் த்ரிஷா..... வெளியான புதிய தகவல்!

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் த்ரிஷா….. வெளியான புதிய தகவல்!

-

நடிகர் ஆர்.ஜே பாலாஜி விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரௌடி தான் படத்தில் நடிப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் த்ரிஷா..... வெளியான புதிய தகவல்!அதைத்தொடர்ந்து எல் கே ஜி, வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்து ஆச்சரியப்படுத்தினார். கடைசியாக இவர் சிங்கப்பூர் சலூன் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் ஆர்.ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படத்தில் ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து மௌலி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி, அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் த்ரிஷா..... வெளியான புதிய தகவல்!அதன்படி இந்த படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. இவரின் கதாபாத்திரம் மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா நடித்திருந்த அம்மன் கதாபாத்திரமாக இருக்கலாம் என்று செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ