Homeசெய்திகள்சினிமாஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'சூர்யா 45'.... படப்பிடிப்பில் பங்கேற்ற திரிஷா!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’…. படப்பிடிப்பில் பங்கேற்ற திரிஷா!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் ஆர்.ஜே. பாலாஜி தற்போது சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'சூர்யா 45'.... படப்பிடிப்பில் பங்கேற்ற திரிஷா!இந்த படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். மௌனம் பேசியதே, ஆறு ஆகிய படங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் திரிஷா கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது. மேலும் சூர்யா 45 திரைப்படத்தினை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். ஃபேண்டஸி கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு கோயம்புத்தூர் பகுதியில் கோயில் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'சூர்யா 45'.... படப்பிடிப்பில் பங்கேற்ற திரிஷா!இந்நிலையில் இன்று முதல் (டிசம்பர் 4) நடிகை திரிஷா, சூர்யா 45 படப்பிடிப்பில் பங்கேற்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

நடிகை திரிஷா, அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ஐடெண்டிட்டி, விஷ்வம்பரா என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ