Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் மறைவுக்கு நடிகை த்ரிஷா, குஷ்பு இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு நடிகை த்ரிஷா, குஷ்பு இரங்கல்

-

- Advertisement -
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் த்ரிஷா மற்றும் குஷ்பு ஆகியோர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

சினிமா பின்புலம் இல்லாமல் மதுரையிலிருந்து சென்னை வந்து உச்ச நடிகராக உயரம் தொட்டவர் விஜயகாந்த். இன்று உடல் நலக்குறைவால் விஜயகாந்த் இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் மக்களையும் தீரா சோகத்தில் ஆழ்த்திச் சென்று விட்டார் விஜயகாந்த். தீவிர சுவாசப் பிரச்சனையால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார். நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகையும், அரசியல் பிரபலமும் ஆன குஷ்பு, கேப்டன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தங்கம் போன்ற மனசு கொண்ட ஒரு வைர மனிதரை இழந்து விட்டோம். அவரது குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார். காதல் சித்திரம், சிம்மாசனம், வீரம் வெளஞ்ச மண்ணு உள்ளிட்ட திரைப்படங்களில் விஜயகாந்த்துடன் இணைந்து குஷ்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கோலிவுட்டின் முன்னணி நடிகை த்ரிஷாவும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

MUST READ