Homeசெய்திகள்சினிமாவக்கீலாக நடிக்கும் திரிஷா.... 'சூர்யா 45' பட அப்டேட்!

வக்கீலாக நடிக்கும் திரிஷா…. ‘சூர்யா 45’ பட அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வக்கீலாக நடிக்கும் திரிஷா.... 'சூர்யா 45' பட அப்டேட்!இதனை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படமானது ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. மௌனம் பேசியதே, ஆறு ஆகிய படங்களுக்கு பிறகு சூர்யாவும் திரிஷாவும் இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதன்படி இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூர் பகுதியில் கோயில் போன்ற செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வக்கீலாக நடிக்கும் திரிஷா.... 'சூர்யா 45' பட அப்டேட்!இந்த மாதம் 23ஆம் தேதி வரை இப்படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சூர்யாவின் காட்சிகள் இந்த மாதம் 16ஆம் தேதி வரை படமாக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடி யாரும் இல்லை எனவும் நடிகை திரிஷா இப்படத்தில் வக்கீலாக நடிக்கிறார் எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ