தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவருக்கு பிறகு எத்தனை நடிகைகள் வந்தாலும் அன்று முதல் இன்று வரை தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை தக்க வைத்திருக்கிறார். அதன்படி தற்போது மீண்டும் கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு ஆகியோருடன் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இவர் கமல், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா. மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) இந்த படத்தின் முதல் பாடலும் வெளியாக இருக்கிறது.
அதேசமயம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெறுகிறது. அதில் கமல்ஹாசன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான், அசோக் செல்வன்z திரிஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது திரிஷா, “விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மீண்டும் எப்போது சிம்புவுடன் இணைந்த நடிப்பீர்கள் என்று எல்லோரும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதன்படி அந்த மேஜிக்கை தக் லைஃப் படத்தில் கொஞ்சம் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த 2010 கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவும், திரிஷாவும் விண்ணைத்தாண்டி வருவாயா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் சிம்பு மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. எத்தனை காதல் படங்கள் வந்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினை ரசிகர்கள் கொண்டாட மறக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு அந்த படம் ரசிகர்களின் பேவரைட் படமாக அமைந்திருக்கிறது. தற்போது தக் லைஃப் படத்திலும் சிம்புவிற்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. ஆகையினால் சிம்பு- திரிஷாவின் கெமிஸ்ட்ரியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.