Homeசெய்திகள்சினிமாகோட் படத்தை தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் நடனமாடும் திரிஷா.... வெளியான புதிய தகவல்!

கோட் படத்தை தொடர்ந்து ‘தக் லைஃப்’ படத்தில் நடனமாடும் திரிஷா…. வெளியான புதிய தகவல்!

-

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னர் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இவர் தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்று அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். கோட் படத்தை தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் நடனமாடும் திரிஷா.... வெளியான புதிய தகவல்!அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் கலக்கி வருகிறார் திரிஷா. கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது மட்டுமல்லாமல் திரிஷாவும் ட்ரெண்டாகி வந்தார். கில்லி படத்தின் அப்படி போடு பாடலுக்கு பிறகு விஜய் – திரிஷா இருவரும் நடனமாடுவதை கண்ட ரசிகர்கள் இந்த பாடலை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர். கோட் படத்தை தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் நடனமாடும் திரிஷா.... வெளியான புதிய தகவல்!இந்நிலையில் அடுத்ததாக நடிகை திரிஷா, தக் லைஃப் படத்திலும் நடனமாட இருக்கிறார் என புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே மீண்டும் நடிகை திரிஷா நடனமாடுவதை திரையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். கோட் படத்தை தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் நடனமாடும் திரிஷா.... வெளியான புதிய தகவல்!ஆனால் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையவில்லை என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் தனிப்பட்ட காரணத்திற்காக வெளிநாடு செல்ல இருப்பதால் அவருடைய காட்சிகளும் டப்பிங் பணிகளும் நிறைவடைந்து விட்டதாம். இன்னும் சில காட்சிகளும் பாடல்களும் மட்டும் படமாக்கப்பட உள்ளதாம். மீண்டும் இப்படை படிப்பினை அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாத முதல் வாரத்தில் தொடங்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்படம் 2025 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ