துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தை தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார், வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோரின் கூட்டணி விடாமுயற்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் விடாமுயற்சியில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50 சதவீதம் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித், திரிஷா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கின்றனர்.
இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் இரண்டு அர்ஜுன்கள் என சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லையாம். அர்ஜுன் என்பது அஜித்தின் கதாபாத்திரமாம். ஆகவே ரீல் அர்ஜுன், ரியல் அர்ஜுன் என இரண்டு அர்ஜுன்கள் இருக்கின்றனராம். நடிகை திரிஷா கயல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். மேலும் விடாமுயற்சி சம்பந்தமான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.