Homeசெய்திகள்சினிமாஅட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?

அட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?

-

அட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?இயக்குனர் அட்லீ, கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து தெறி, மெர்சல் , பிகில் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் அட்லீ, பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் வெளியான இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிற்கு சென்ற எந்த ஒரு தமிழ் இயக்குனரும் தனது முதல் படத்திலேயே இந்த அளவு சாதனை படைத்ததில்லை என்ற பெயரை இயக்குனர் அட்லீ பெற்றிருக்கிறார். அதே வேளையில் அட்லீ, மீண்டும் ஷாருக்கானை வைத்து படம் இயக்க போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமிழிலும் விஜய்யின் 69வது படத்தை அட்லீ இயக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே ஒருபக்கம் பாலிவுட்டில் ஷாருக்கான் பதான், ஜவான் உள்ளிட்ட பல படங்களின் மூலம் தான் கிங் ஆப் பாக்ஸ் ஆபிஸ் என்பதை நிரூபித்து வருகிறார். அதே சமயம் இன்னொரு பக்கம் கோலிவுட்டில் விஜய் மாஸ்டர், லியோ உள்ளிட்ட பல படங்களின் மூலம் தான் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்பதை நிரூபித்து வருகிறார்.அட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?

இந்நிலையில் ஷாருக்கான், விஜய் கூட்டணியில் அட்லீ புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும், அவர்களுக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை அட்லீ தொடங்கியுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இரண்டு பாக்ஸ் ஆபீஸ் மன்னர்களும் ஒன்றிணைந்தால் தரமான சம்பவம் நிச்சயம் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ