Homeசெய்திகள்சினிமாஇரண்டு முறை கார் பந்தயத்தில் வெற்றி.... சென்னை திரும்பி அஜத்... அடுத்தது என்ன?

இரண்டு முறை கார் பந்தயத்தில் வெற்றி…. சென்னை திரும்பி அஜத்… அடுத்தது என்ன?

-

- Advertisement -

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறார். இரண்டு முறை கார் பந்தயத்தில் வெற்றி.... சென்னை திரும்பி அஜத்... அடுத்தது என்ன?இவரது நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே டீசரும், அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், நடிகர் அஜித் சினிமாவை போல் கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வம் உடையவர்.இரண்டு முறை கார் பந்தயத்தில் வெற்றி.... சென்னை திரும்பி அஜத்... அடுத்தது என்ன? அந்த வகையில் அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் அணி ஒன்றை உருவாக்கிய இவர் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடந்த 24H தொடரில் மூன்றாம் இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியப் படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து இத்தாலையில் நடந்த கார் பந்தயத்திலும் மூன்றாம் இடத்தை பிடித்து மீண்டும் சாதனை படைத்தார் அஜித். இதற்கிடையில் அஜித்திற்கு பத்மபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அஜித், இரண்டு மகத்தான வெற்றிகளுக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை கொண்டாட ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.இரண்டு முறை கார் பந்தயத்தில் வெற்றி.... சென்னை திரும்பி அஜத்... அடுத்தது என்ன? அதே சமயம் அஜித் அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அதாவது ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியானது. தற்போது அஜித், சென்னை திரும்பி உள்ள நிலையில் இந்த புதிய படம் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ