Homeசெய்திகள்சினிமாஜோ படக்குழுவினரை வாழ்த்திய இரண்டு ட்ரெண்டிங் இயக்குனர்கள்!

ஜோ படக்குழுவினரை வாழ்த்திய இரண்டு ட்ரெண்டிங் இயக்குனர்கள்!

-

- Advertisement -

ஜோ படக்குழுவினரை வாழ்த்திய இரண்டு ட்ரெண்டிங் இயக்குனர்கள்!தொலைக்காட்சி தொகுப்பாளரான ரியோ ராஜ் நடித்துள்ள ஜோ திரைப்படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உணர்ச்சிப் பூர்வமான காதல் கதையம்சம் கொண்ட ரசிகர்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. சாதாரண காதல் படங்களைப் போலவே கதாநாயகன், கதாநாயகி, கல்லூரி, காதல் என சென்றாலும் மெல்ல மெல்ல ஒரு சிறந்த படைப்பாக மாறுகிறது. குறிப்பாக கண் கலங்க வைக்கும் இன்டர்வல் பிளாக் மற்றும் யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் போன்ற விஷயங்கள் படத்திற்கு மேன்மேலும் வலம் அளிக்கிறது. முதல் பாதி காமெடியாக சென்றாலும் கூட இரண்டாம் பாதி எமோஷனல் நிறைந்து மனதை உருக வைக்கிறது. நடப்பாண்டின் சிறந்த படங்களும் இந்த ஜோக் திரைப்படமும் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.ஜோ படக்குழுவினரை வாழ்த்திய இரண்டு ட்ரெண்டிங் இயக்குனர்கள்!

மேலும் இப்படியான ஒரு சிறந்த கதையை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்ததற்காக பல்வேறு தரப்பினர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்களும் ஜோ பட குழுவினரை நேரில் சென்று வாழ்த்தி உள்ளனர்.

அந்த வரிசையில் ஜெயிலர் படத்தின் மூலம் வசூலை அள்ளிய நெல்சன் மற்றும் லியோ படத்தின் மூலம் வசூலை அள்ளிய லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் சமீபத்தில் ஜோ படக்குழுவினருடன் இணைந்து ஜோ திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்ததற்காக படக்குழுவினரையும் வாழ்த்தி உள்ளனர். இதனை நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்திலும் கூட பதிவிட்டுள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கியுள்ளார். இதில் ரியோ ராஜுடன் இணைந்து பவ்யா த்ரிகா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சித்து குமார் இதற்கு இசையமைத்துள்ளார்.

MUST READ