தமிழ் சினிமாவை புரட்டிப் போட வரும் உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள்.உலகநாயகன் கமல்ஹாசன், “ஐந்து முதல் நீ.. ஆடி வந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை…” என்னும் வரிகளுக்கு ஏற்ப இத்தனை வயதிலும் சினிமாவில் புதுப்புது முயற்சிகளையும் மேற்கொண்டு தன்னைத் தானே அப்டேட் செய்து கொண்டு தற்போது மிரட்டலான படங்களைக் கைவசம் வைத்துள்ளார். கமலின் ஃபேன் பாயான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்” தமிழ் சினிமாவில் கமலின் அடுத்த அத்தியாயத்தை எழுத ஊன்றுகோலாக அமைந்தது. கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. இந்நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் “இந்தியன் 2” படத்தில் நடித்து முடித்துள்ளார்.
1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமா ,அதுவரை பார்த்திராத பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக இப்படம் வெளியாவதால் இந்தியன் 2 படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இந்தியன் 3 திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் 90% முடிக்கப்பட்டுள்ளன. இந்தியன் 2 படமானது 2024 சம்மர் ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இந்தியன்-3 படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் “கல்கி 2898 AD ” படத்தில் வில்லனாக மிரட்ட உள்ளார் கமலஹாசன். இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் “தக் லைஃப்“படத்தில் நடிக்க உள்ளார் கமல். ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ்,திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர் இப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடிக்கின்றனர். கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி 18 முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்தப் படங்களை முடித்த பின்னர் எச்.வினோத் இயக்கத்தில் KH233 படத்தில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன். இதற்கான அறிவிப்பு வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற தரமான படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கும் படம் என்பதால் இப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த வரிசையில் கமலஹாசன் நடிக்கும் 237 வது படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு மற்றும் அறிவு இயக்க உள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து தற்போது புரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பல ஆக்சன் திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய அன்பறிவு மாஸ்டர்கள் ஏற்கனவே கமலுடன் விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள தக் லைஃப் போன்ற படங்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர்.
எனவே தற்போது கமல்ஹாசனை வைத்து அவர்கள் இயக்கவுள்ள புதிய படத்தில் சண்டைக் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்பதால் இப்படத்திற்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கம் உள்ள விக்ரம் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார் கமல். இவ்வாறு அடுத்தடுத்து மாஸான படங்களைக் களம் இறக்கத் திட்டமிட்டுள்ள கமலின் மாஸ்டர் பிளான் வேற லெவல் என்றும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
- Advertisement -