Homeசெய்திகள்சினிமாகல்கி திரைப்படத்தில் கமல்ஹாசன் காட்சிகள் குறைவா?... இதுதான் காரணமாம்...

கல்கி திரைப்படத்தில் கமல்ஹாசன் காட்சிகள் குறைவா?… இதுதான் காரணமாம்…

-

தெலுங்கு நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி பான் இந்தியா நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார் நடிகர் பிரபாஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில், பாகுபலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். பாகுபலி படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்த சாஹோ, ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சலார்.

சலார் திரைப்படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே. அதாவது கல்கி 2898 AD.இப்படம் இந்திய திரை உலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் புதியஅப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, கல்கி திரைப்படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் இடம்பெறும் காட்சிகள் மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே உள்ளதாம். இதற்கு காரணம் கமல்ஹாசன் வரும் முதல் காட்சி தான் படத்திற்கே திருப்பு முனையாக இருக்கும் என்றும், இரண்டாம் பாகத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேர காட்சிகள் கமல்ஹாசனுக்காக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

MUST READ