உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உறியடி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய்குமார். இந்த படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். அரசியல் பின்னணியில் வெளியான இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றது. அதன் பின்னர் உறியடி 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார் விஜய்குமார். அடுத்ததாக சிறிய இடைவெளிக்குப் பிறகு ஃபைட் கிளப் எனும் திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக களமிறங்கினார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, உறியடி விஜய்குமார் எலக்சன் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்குமார் உடன் இணைந்து அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சேத்துமான் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்குகிறார். இதனை ரீல் குட் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து படத்தின் பாடல்களும் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி படமானது 2024 மே 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.