Homeசெய்திகள்சினிமாபார்வதி - ஊர்வசி கூட்டணியில் உள்ளொழுக்கு... ஜூனில் படம் ரிலீஸ்...

பார்வதி – ஊர்வசி கூட்டணியில் உள்ளொழுக்கு… ஜூனில் படம் ரிலீஸ்…

-

- Advertisement -
பார்வதி மற்றும் ஊர்வசி நடித்திருக்கும் உள்ளொழுக்கு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஜூன் 21-ம் தேதி படம் வெளியாகிறது.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி திருவோத்து. தனது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழில்  மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான உயரே திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. சினிமா மட்டுமல்லாது சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், சமூக பிரச்னைகள் என அனைத்துக்கும் பார்வதி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறாார்.

இந்நிலையில் நடிகை பார்வதி, பிரபல தமிழ் நடிகை ஊர்வசியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு உள்ளொழுக்கு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆர்எஸ்விபி தயாரிக்க, சுஷின் ஷ்யாம் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், ஜூன் 21-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

MUST READ