1980 காலகட்டங்களில் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஊர்வசி. மலையாளத் திரை உலகில் அறிமுகமான இவர் பாரதிராஜாவின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழி படங்கள் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவையான நடிப்பு ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஊர்வசியின் 700 ஆவது படமான அப்பத்தா திரைப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது ஊர்வதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ஜெ.பேபி. பா ரஞ்சித் இப்படத்தை தயாரித்து உள்ளார். சுரேஷ் மாரி படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த 2022 ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஊர்வசி, மாறன், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு டோனி பிரிட்டோ இசை அமைத்துள்ளார். ஜெயந்த் சேது படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்கு படக்குழு யு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.