நடிகை ஊர்வசி தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் 700க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஊர்வசி வீட்டுல விசேஷம், அப்பத்தா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து ஊர்வசி J. பேபி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், மாறன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் மாரி எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை விட்டாஸ் மீடியா மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜெயந்த் சேது மாதவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய டோனி பிரிட்டோ இதற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
She’s coming with a bang💥🎧
Unveiling a new face of our Baby😎 #JBaby‘s 2nd single is all set to break the floor❤️🔥
Releasing on 16th February#JBabyFromMar8 🌼💙@beemji @Officialneelam @GRfilmssg @Sureshmariii #Urvashi #Dinesh #Maaran @Tonycomposer @jayanthsm pic.twitter.com/nveZw2bNKa
— Neelam Studios (@NeelamStudios_) February 14, 2024
அதைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலும் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி J. பேபி படத்தின் இரண்டாவது பாடல் நாளை பிப்ரவரி 16 வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.