ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள J. பேபி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகை ஊர்வசி நடிப்பில் J. பேபி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க சுரேஷ் மாரி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஊர்வசியுடன் இணைந்து அட்டக்கத்தி தினேஷ், மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படமானது மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் பட குழுவினர் அடுத்தடுத்த பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான நிலையில் படத்தின் டிரைலரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லரின் மூலம் இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது தெரிகிறது.
இந்த ட்ரெய்லரில் ‘நான் இந்திரா காந்தியின் பிரண்டு ஜெயலலிதாவின் பிரண்டு’ போன்ற வசனங்கள் இடம் பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.
எனவே ஊர்வசியின் மற்ற படங்களைப் போல் இந்த படமும் ரசிகர்களின் பேராதரவை பெறும் என்று நம்பப்படுகிறது.