ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள அப்பத்தா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
1980 காலகட்டங்களில் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஊர்வசி. மலையாளத் திரை உலகில் அறிமுகமான இவர் பாரதிராஜாவின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழி படங்கள் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவையான நடிப்பு ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் ஊர்வசியின் 700 ஆவது படமான அப்பத்தா என்ற திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் பிரியதர்ஷன் படத்தை இயக்கியுள்ளார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். வருகின்ற ஜூலை 29ஆம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
Join Kannamma also belovedly known as #Appatha for a touching tale of love, family, and overcoming fears. 🐾❤️ Don’t miss this heartwarming film that will leave you smiling and teary-eyed at the same time! Watch #AppathaOnJioCinema, Streaming Free 29 July.@priyadarshandir… pic.twitter.com/ttsotZPLyd
— Jio Studios (@jiostudios) July 24, 2023
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதில் கிராமத்தில் வசிக்கும் ஊர்வசி சென்னையில் இருக்கும் தனது மகன் வீட்டிற்கு செல்கிறார். அங்கே நாய் ஒன்று செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகிறது. அதைக் கண்டு ஊர்வசி பயப்படுகிறார். இவ்வாறு ஊர்வசி மற்றும் அந்த செல்லப்பிராணிக்கும் இடையேயான சுவாரசியமான காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது