Homeசெய்திகள்சினிமாபுது விதமான புரமோசனை கையில் எடுத்த ஜெ பேபி... மக்கள் மத்தியில் ஊர்வசி...

புது விதமான புரமோசனை கையில் எடுத்த ஜெ பேபி… மக்கள் மத்தியில் ஊர்வசி…

-

மலையாளத் திரை உலகில் அறிமுகமான ஊர்வசி, பாரதிராஜாவின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழி படங்கள் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவையான நடிப்பு ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது ஊர்வதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ஜெ.பேபி. பா ரஞ்சித் இப்படத்தை தயாரித்து உள்ளார். சுரேஷ் மாரி படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த 2022 ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஊர்வசி, மாறன், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் மார்ச் 8-ம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி, படத்திற்கான புரமோசன் பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நடிகை ஊர்வசி புது விதமான புரமோசனில் இறங்கி இருக்கிறார். சென்னை நகரில் மக்கள் கூடியிருக்கும் பகுதிகளுக்கு கதாபாத்திர தோற்றத்தில் சென்று அவர்களுடன் வேடிக்கையாக நடந்து கொள்கிறார் ஊர்வசி. படத்தில் வரும் தனது கதாபாத்திரத்தை போலவே அவர் நடந்துகொண்ட காணொலி இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகிறது.

MUST READ