Homeசெய்திகள்சினிமாஊர்வசியின் J. பேபி எப்படி இருக்கு..... திரை விமர்சனம் இதோ!

ஊர்வசியின் J. பேபி எப்படி இருக்கு….. திரை விமர்சனம் இதோ!

-

- Advertisement -

பிரபல நடிகை ஊர்வசி கிட்டத்தட்ட தமிழ், மலையாளம் உள்பட 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் J. பேபி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுரேஷ் மாரி எழுதி இயக்கியுள்ளார்.ஊர்வசியின் J. பேபி எப்படி இருக்கு..... திரை விமர்சனம் இதோ! இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஊர்வசிக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். ஊர்வசி தன் பிள்ளைகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது. இதனால் பல அலப்பறைகளை செய்து விடுகிறார். ஊர்வசியின் ஞாபகம் வருதே மகன்களையும் மகள்களையும் பெரும் வில்லங்கத்தில் மாட்டி விடுகிறது. இதன் காரணமாக அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க, மருத்துவமனையில் இருந்து கிளம்பி சென்று விடுகிறார். ஊர்வசியின் J. பேபி எப்படி இருக்கு..... திரை விமர்சனம் இதோ! இதனால் உள்ளூர் போலீஸ் தினேஷ் மற்றும் மாறன் இருவரையும் ஊர்வசியை தேடி கண்டுபிடித்து அழைத்து வருமாறு அனுப்பி வைக்கின்றனர். அண்ணன் தம்பிகளான தினேஷ் மற்றும் மாறன் ஆகிய இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவர்கள் மொழி தெரியாத ஊருக்கு சென்று தனது அம்மாவான ஊர்வசியை தேடுகின்றனர். பின்பு அவர்கள் தனது அம்மாவை கண்டுபிடித்து அழைத்து வந்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை. இதனை உணர்ச்சிப்பூர்வமாகவும் நகைச்சுவையுடனும் கூறி இருக்கிறார் சுரேஷ் மாரி.ஊர்வசியின் J. பேபி எப்படி இருக்கு..... திரை விமர்சனம் இதோ!

ஊர்வசியின் அசாத்தியமான நடிப்பு படம் முழுவதும் தாங்கிப் பிடித்துள்ளது. ஞாபக மறதியால் ஊர்வசி செய்யும் அலப்பறைகள், லூட்டிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. இருப்பினும் வயதான காலத்தில் ஒரு குழந்தை போல் மாறும் ஊர்வசி தனது இயலாமையை தனது மகன்களிடம் சொல்லும் காட்சி கண்கலங்க வைக்கிறது. குழந்தைகளாக மாறும் அம்மாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வுபூர்வமான கதைக்களத்தில் ஒரு அழகான காவியமாக படைத்திருக்கிறார் இயக்குனர். இடையிடையில் சில தொய்வுகள் இருந்தாலும் ஊர்வசியின் நடிப்பு அந்த தொய்வுகளை மறைத்து சுவாரசியமாக படத்தைக் கொண்டு செல்கிறது.ஊர்வசியின் J. பேபி எப்படி இருக்கு..... திரை விமர்சனம் இதோ!
அட்டகத்தி தினேஷ், சிறப்பாக நடித்து அந்தக் கதாபாத்திரமாகவே பொருந்தி போயுள்ளார். முதல் பாதியில் இடம் பெற்றுள்ள காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. டோனி பிரிட்டோவின் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு அனைத்தையும் நேச்சுரலாக காட்டியுள்ளது. ஆகவே மொத்தத்தில் J. பேபி படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படைப்பு. குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கும் ஒரு திரைப்படம் தான் இந்த J. பேபி.

MUST READ