Homeசெய்திகள்சினிமாஇன்றும் குறையாத ரசிகர்கள் கூட்டம்... வாரணம் ஆயிரம் ரி ரிலீஸூக்கு வரவேற்பு...

இன்றும் குறையாத ரசிகர்கள் கூட்டம்… வாரணம் ஆயிரம் ரி ரிலீஸூக்கு வரவேற்பு…

-

தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம். சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தந்தை, மகன் இடையேயான பாசத்தை காட்டும் இத்திரைப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் சூர்யா இளைஞராக, ராணுவ வீரராகவும் வயதான அப்பாவாகவும் என பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியிருந்தன. படத்தின் பாடல் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவின் கிளாசிக் என்ற பட்டியலில் இணைந்து தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது இந்தப் படம். இத்திரைப்படம் தெலுங்கு ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. தெலுங்கிலும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், வாரணம் ஆயிரம் திரைப்படம் சென்னை, கோவையில் பல திரையரங்குகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுகள் ஆயினும் படத்திற்கு முன்னர் போலவே பெரும்வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையரங்குளில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் படத்தை கொண்டாடும் காணொலி வெளியாகியுள்ளது.

MUST READ