Homeசெய்திகள்சினிமாமாரி செல்வராஜ் இயக்கும் வாழை... டப்பிங் பணிகள் தீவிரம்...

மாரி செல்வராஜ் இயக்கும் வாழை… டப்பிங் பணிகள் தீவிரம்…

-

- Advertisement -
kadalkanni

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் வாழை திரைப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர், தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி மாரி செல்வராஜை கோலிவுட்டின் முன்னணி இயக்குநாக நிலை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம், கடந்த ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

மாமன்னன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். மேலும், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, மேலும் சில சிறுவர்களும் படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இத்திரைப்படம், மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி உருவாகியுள்ளதாக கூறப்பட்டது. வாழைத் தோட்டத்தில் பணிபுரியும் சிறுவர்களை பற்றிய கதையாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வௌியாகி உள்ளன. வாழை திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

MUST READ