மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் வாழை படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருடைய படங்கள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாத கதை அம்சத்தை கொண்டிருக்கும். அடுத்ததாக மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கிடையில் மாரி செல்வராஜ் வாழை என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து டப்பிங் பணிகளும் முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தினை 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். எனினும் இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்கிறதா அல்லது திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதா என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.