Homeசெய்திகள்சினிமாஇணையத்தை கலக்கும் வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர்

இணையத்தை கலக்கும் வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர்

-

- Advertisement -
kadalkanni
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி இன்று நடிகராக கலக்கி வருபவர் சந்தானம். சொல்லு சபா எனும் பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதையடுத்து கோலிவுட் பக்கம் திரும்பிய அவர், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். விஜய், அஜித், ரஜினி, என அனைத்து டாப் நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களிலும் அவர் நகைச்சுவை நடிகராக பணியாற்றி உள்ளார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்தார். இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோ வேடத்தில் மட்டும் நடித்து வருகிறார். ஆண்டுக்கு பல திரைப்படங்களில கமிட்டாகி சந்தானம் நடித்து வருகிறார்.

சந்தானம் நடிப்பில் இறுதியாக வௌியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன. தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளார். இதில் சந்தானம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷூம் நடித்து உள்ளார். ஷான் ரோல்டன் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. வரும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பாக வௌியான முன்னோட்டம் சுமார் 60 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

MUST READ