Homeசெய்திகள்சினிமாதிரையரங்கம் முழுவதும் சிரிப்பொலியில்..... 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் வசூல் நிலவரம்!

திரையரங்கம் முழுவதும் சிரிப்பொலியில்….. ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் வசூல் நிலவரம்!

-

- Advertisement -

நடிகர் சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ், கிக், 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்கள் வெளியானது. குறிப்பாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. திரையரங்கம் முழுவதும் சிரிப்பொலியில்..... 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் வசூல் நிலவரம்!இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி உள்ள முதல் படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தை டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ், நிழல் ரவி, ரவிமரியா, ஜான் விஜய், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். திரையரங்கம் முழுவதும் சிரிப்பொலியில்..... 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் வசூல் நிலவரம்!கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகளுக்கு திரையரங்கமே சிரிப்பொலியில் நிறைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ