Homeசெய்திகள்சினிமாவிரைவில் ஓடிடிக்கு வருகிறது வைபவின் 'ரணம்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விரைவில் ஓடிடிக்கு வருகிறது வைபவின் ‘ரணம்’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

வைபவ் நடிப்பில் வெளியான ரணம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் ஓடிடிக்கு வருகிறது வைபவின் 'ரணம்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் வைபவ் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக உருவெடுத்தார். அதன்படி பல படங்களில் கதாநாயகனாக நடித்த பெயர் பெற்ற வைபவ் அடுத்ததாக ஆலம்பனா சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் வைபவ், ரணம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வைபவின் 50வது திரைப்படம் ஆகும்.
இந்தப் படத்தை மிதுன் நித்ரா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஷெரீஃப் இயக்கியிருந்தார். பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிலும் அரோல் கொரெல்லியின் இசையிலும் இப்படம் உருவாகியிருந்தது. இதில் வைபவுடன் இணைந்து தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சுரேஷ் சக்கரவர்த்தி, சரஸ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கி இருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் ஓடிடிக்கு வருகிறது வைபவின் 'ரணம்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நள்ளிரவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ