Homeசெய்திகள்சினிமாவைபவ் நடிப்பில் உருவாகும் ஆலம்பனா... அல்டிமேட்டான ட்ரெய்லர் வெளியீடு!

வைபவ் நடிப்பில் உருவாகும் ஆலம்பனா… அல்டிமேட்டான ட்ரெய்லர் வெளியீடு!

-

- Advertisement -

வைபவ் நடிப்பில் உருவாகும் ஆலம்பனா... அல்டிமேட்டான ட்ரெய்லர் வெளியீடு!வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 – 2, கோவா, மங்காத்தா, சரோஜா போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் ஹலோ நான் பேய் பேசுறேன், கப்பல், மேயாத மான், லாக்கப் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார். இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் முந்தைய படங்களுக்கு தொடர்பில்லாத கதையம்சமாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மலேசியா டு அம்னீசியா எனும் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இவர் ஆலம்பனா எனும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். வைபவ் நடிப்பில் உருவாகும் ஆலம்பனா... அல்டிமேட்டான ட்ரெய்லர் வெளியீடு!இந்த படத்தில் வைபவ், முனிஷ் காந்த், பார்வதி நாயர், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், யோகி பாபு, பாண்டியராஜ் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாரி கே விஜய் இந்த படத்தை இயக்க கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம் படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதை தொடர்ந்து கடந்த வருடம் கலகலப்பான டீசர் வெளியாகி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் அல்டிமேட்டான ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. வைபவ் இதில் அலாவுதீனாகவும், முனீஸ்காந்த் இதில் பூதமாகவும் நடித்துள்ளார். பணக்கார குடும்பத்தில் வைபவ் பிறக்கிறார். ஆனால் அவர் பிறந்த பிறகு அந்த குடும்பத்தின் சொத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் கையை விட்டு போக, அனைவரும் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறார்கள். இதனால் வைபவ் அதிர்ஷ்டமில்லாதவன் என்று கூறுகிறார்கள். பின் திடீரென ஒரு பூதத்தினால் (முனீஸ்காந்த் ) வைபவ் குடும்பத்திற்கு சொத்து சுகம் எல்லாம் கிடைக்கிறது . அந்த பூதம் அவர்களுக்கு அனைத்தையும் தன் சக்தியால் செய்து கொடுக்கிறது. இவ்வாறு கலகலப்பாக இந்த ட்ரெய்லர் நீண்டுள்ளது.
இந்த ட்ரெய்லர் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ