வைபவ் நடிப்பில் உருவாகும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் வைபவ், ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். அதன் பின்னர் ஹீரோவாக ஒரு வருடத்தை இவர் மேயாத மான், கப்பல், லாக்கப், மலேசியா டு அம்னீசியா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்ததாக இவர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம் விக்ரம் ராஜசேகர் மற்றும் அருண் கேசவ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் எனும் திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார் வைபவ். இந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை டிமான்ட்டி காலனி 2 படத்தை தயாரித்துள்ள பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. டி இமானின் இசையிலும் டிஜோ டாமியின் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியான நிலையில் தற்போது மெய்யா மும்மாரி எனும் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை கார்த்திக் பாடியுள்ள நிலையில் கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.