Homeசெய்திகள்சினிமாகிரைம் த்ரில்லரில் வைபவ்..... 'ரணம்' படத்தின் டீசர் வெளியானது!

கிரைம் த்ரில்லரில் வைபவ்….. ‘ரணம்’ படத்தின் டீசர் வெளியானது!

-

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ரணம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தின் மூலம் அறிமுகமான வைபவ் தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அறிமுகமானவர். அந்த வகையில் மேயாத மான், கப்பல், லாக்கப், பபூன், ஆர் கே நகர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரணம் என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷெரிஃப் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை மது நாகராஜன் தயாரித்துள்ளார்.

மேலும் இதற்கு அரோல் கொரெல்லி இசையமைதுள்ளார். இதில் வைபவுடன் இணைந்து தான்யா ஹோப் மற்றும் நந்திதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து தற்போது ரணம் படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசரின் மூலம் இப்படம் ஒரு கிரைம் திரில்லர் கதைகளத்தில் உருவாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் ரணம் என்ற தலைப்புடன் அறம் தவறேல் என்ற டேக் லைன் குறிப்பிடப்பட்டுள்ளது. மிரட்டலான பின்னணி இசை உடன் வெளியான இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ