Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

-

- Advertisement -
நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் தனது 71-வது வயதில் சென்னையில் உயிரிழந்தார். மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விஜயகாந்த் மறைவு செய்தியை அறிந்த ரசிகர்கள், தேமுதிக தொண்டகர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். ரஜினி, கமல், தொடங்கி அனைத்து முன்னணி நடிகர்களும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 80 மற்றும் 90-களில் விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றி நடிகர், நடிகைகளும் அவரது மறைவுக்கு இரங்கல் கூறி செய்தி பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வௌியிட்டுள்ளார். அதில்,
எரிமலை எப்படிப் பொறுக்கும்
என்ற என் பாடலுக்கு
உயிர்கொடுத்த கதாநாயகன்
உயிரிழந்து போனார்
திரையில் நல்லவர் ;
அரசியலில் வல்லவர்
சினிமாவிலும் அரசியலிலும்
‘டூப்’ அறியாதவர்
கலைவாழ்வு பொதுவாழ்வு
கொடை மூன்றிலும்
பாசாங்கு இல்லாதவர்
கலைஞர் ஜெயலலிதா என
இருபெரும் ஆளுமைகள்
அரசியல்செய்த காலத்திலேயே
அரசியலில் குதித்தவர்
எதிர்க்கட்சித் தலைவர் என்ற
உயரம் தொட்டவர்
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசாதவரை
நில்லென்று சொல்லி
நிறுத்திவிட்டது காலம்
வருந்துகிறேன்
கண்ணீர் விடும்
குடும்பத்தார்க்கும்
கதறி அழும்
கட்சித் தொண்டர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்

வைரமுத்து உள்பட பல நட்சத்திரங்களும் விஜயகாந்த் இரங்கல் தெரிந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ