Homeசெய்திகள்சினிமாபொங்கலுக்கு விடாமுயற்சி வந்திருந்தால் இந்த படம் வந்திருக்காது.... 'வணங்கான்' பட தயாரிப்பாளர்!

பொங்கலுக்கு விடாமுயற்சி வந்திருந்தால் இந்த படம் வந்திருக்காது…. ‘வணங்கான்’ பட தயாரிப்பாளர்!

-

- Advertisement -

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவந்திருந்தால் வணங்கான் திரைப்படம் வந்திருக்காது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.பொங்கலுக்கு விடாமுயற்சி வந்திருந்தால் இந்த படம் வந்திருக்காது.... 'வணங்கான்' பட தயாரிப்பாளர்!

அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வணங்கான். இந்த படத்தினை இயக்குனர் பாலா இயக்க வி ஹவுஸ் ப்ரோடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இதனை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சி எஸ் இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை கவனித்துள்ளார். ஆர் பி குருதேவ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.பொங்கலுக்கு விடாமுயற்சி வந்திருந்தால் இந்த படம் வந்திருக்காது.... 'வணங்கான்' பட தயாரிப்பாளர்! அதன்படி அவர் அந்த பேட்டியில், “பொங்கலுக்கு விடாமுயற்சி வந்திருந்தால் வணங்கான் படம் வந்திருக்காது. விடாமுயற்சி உங்களுக்கு வராது என்பதை முன்பே உணர்ந்ததால் தான் சென்சார் வேலைகளை எல்லாம் முடித்து வைத்திருந்தோம். மேலும் வணங்கான் படத்தின் முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாம் பாதி மிகவும் எமோஷனலாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ