நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் உருவாகி இருந்தால் வணங்கான் திரைப்படம் நேற்று (ஜனவரி 10) பொங்கல் விருந்தாக திரையிடப்பட்டது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்க சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்திருந்தார். ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய், காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார். மேலும் இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்திருந்தனர். பாலாவின் இயக்கத்தில் முதன்முறையாக நடித்த அருண் விஜய் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
#Vanangaan – #ArunVijay got Emotional after seeing the FDFS Response..🤝💥
— Laxmi Kanth (@iammoviebuff007) January 11, 2025
இந்நிலையில் நேற்று ரசிகர்களுடன் இணைந்து வணங்கான் படத்தின் முதல் காட்சியை காண வந்த அருண் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “வணங்கான் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு மகிழ்ச்சியை தருகிறது. எதிர்பாராத இடங்களில் ரசிகர்கள் கைதட்டினர். இந்த பெருமை எல்லாம் இயக்குனர் பாலாவையே சேரும்” என்று கண் கலங்கி பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.