பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா விஜயகுமார் தனது நான்காவது திருமணம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா எனும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து தேவி, நான் ராஜாவாகப் போகிறேன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அடுத்ததாக இவர் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அடுத்தது இவர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி திரைப்படத்திலும், சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான தண்டுபாளையம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். அடுத்தது ஆனந்த் ஜெய் ராயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் 2012 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றுக் கொண்டார். பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு விஷுவல் எபெக்ட் டெக்னீசியனான பீட்டர் பால் என்பவரை மணந்த வனிதா விஜயகுமார் அவரையும் பிரிந்து சென்றார். இந்நிலையில் நான்காவதாக பிரபல நடன இயக்குனர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். அதன்படி இவர்கள் இருவரின் திருமணம் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.