Homeசெய்திகள்சினிமாதேர்தல் வெற்றிக்கு பின் சுரேஷ் கோபியின் முதல் திரைப்படம்... வராஹம் படத்தின் முதல் தோற்றம்...

தேர்தல் வெற்றிக்கு பின் சுரேஷ் கோபியின் முதல் திரைப்படம்… வராஹம் படத்தின் முதல் தோற்றம்…

-

 
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சுரேஷ் கோபி. 80-களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன் தீனா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வௌியான ஐ படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பார். அப்படத்தில் இவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.
ஆக்‌ஷன் ஹீரோவாக மலையாளத்தில் பல படங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர் சுரேஷ் கோபி. நடிப்பு மட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளாக அவர் அரசியலிலும் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார். அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து டெல்லி சென்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், அரசியல் வெற்றிக்கு பின் சுரேஷ் கோபி நடித்திருக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வௌியாகி இருக்கிறது. அதன்படி மலையாளத்தில் சனல் வி தேவன் இயக்கத்தில் சுரேஷ் கோபி நடித்திருக்கும் வராஹம் திரைப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வௌியிட்டுள்ளது. படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, கௌதம் வாசுதேவ் மேனன், நவ்யா நாயர், சராயு மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ