பிரபல நடிகை வரலட்சுமி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். அதைத்தொடர்ந்து இவர் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் வில்லியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பெயர் பெற்று வருகிறார். கடைசியாக வரலட்சுமி சரத்குமார் ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி ரீலீஸுக்கு தயாராகி வரும் ராயன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நிக்கோலாய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்த விவாகரத்து பெற்ற நிலையில் 15 வயதில் மகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் வரலட்சுமி சரத்குமார் நிக்கோலாய் சச்தேவுக்கு இரண்டாவது மனைவியாகப் போகிறார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் தன்னுடைய பார்வைக்கு அழகானவர் என்றும் தனது தந்தை சரத்குமாரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர் தான் எனவும் கூறி எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
- Advertisement -