தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் சிம்புவின் நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்தது இவர், தாரை தப்பட்டை, சர்க்கார், மாரி 2 என பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றுள்ளார். மேலும் கடந்த மாதம் வெளியான மதகஜராஜா திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச் தேவ் என்பதை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் வரலட்சுமி சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என புதிய தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளாராம் வரலட்சுமி. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் சினேகா, சங்கீதா, பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கும் நிலையில் தற்போது சங்கீதா இதிலிருந்து விலகுவதாகவும் அவருக்கு பதிலாக வரலட்சுமி களத்தில் இறங்க உள்ளார் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -