Homeசெய்திகள்சினிமாநடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நேரில் திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி

நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நேரில் திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி

-

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமானவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார். போடா போடி திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் திரைத்துறையில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து,பாலா இயக்கிய தாரை தப்பட்டை உள்பட அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மொழியிலும் அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக மட்டுமன்றி வில்லி வேடத்திலும் நடித்து அசரடித்தவர் நடிகை வரலட்சுமி. சர்கார் படத்தில், இவர் விஜய்க்கு வில்லியாக நடித்து தூள் கிளப்பினார் நடிகை வரலட்சுமி. அடுத்து விஷால் நடித்த சண்டைக்கோழி 2 படத்திலும் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார். தமிழ் தவிர தெலுங்கிலும் அவர் பல படங்களில் நடிகையாகவும், வில்லியாகவும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
அண்மையில் நடிகை வரலட்சுமிக்கும், அவரது காதலர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகேலாய் சச்தேவ் என்பவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வரும் ஜூலை மாதம் இந்த ஜோடிக்கு தாய்லாந்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வரலட்சுமி சரத்குமார் தனது நண்பர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி வருகிறார். கமல், ரஜினி, நயன்தாரா, தனுஷ், சமந்தா, உள்பட பலர் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல் தலைவருமான பாலகிருஷ்ணாவுக்கு திருமண அழைப்பிதழை வரலட்சுமி கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ