வரலட்சுமி திருமண நிகழ்ச்சி… உற்சாக நடனமாடிய சரத்குமார் – ராதிகா…
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவிக்கு பிறந்தவர் ஆவார். கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தெலுங்கில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பல முன்னணி நாயகர்களின் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அது மட்டுமன்றி வில்லியாகவும் நடித்து அசத்துபவர் நடிகை வரலட்சுமி.
தமிழில் விஜய்க்கு வில்லியாக சர்கார் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்தார். இதனிடையே, வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இரு வீட்டார் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இருவரின் திருமணமும் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னையில் மெஹந்தி, சங்கீத் உள்ளிட்ட திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. இதில், நடிகை த்ரிஷா, உள்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மேலும், நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமாரும், ராதிகாவும் உற்சாகமாக நடனமாடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது