Homeசெய்திகள்சினிமாவசூலில் பட்டைய கிளப்பும் வர்ஷங்களுக்கு சேஷம்!

வசூலில் பட்டைய கிளப்பும் வர்ஷங்களுக்கு சேஷம்!

-

சமீபகாலமாக மலையாளத் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து அதிக அளவு வசூலை வாரிக் குவித்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் அதிவேகமாக 200 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.வசூலில் பட்டைய கிளப்பும் வர்ஷங்களுக்கு சேஷம்! அதைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் பிரேமலு, மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம் போன்ற திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்து வருகின்றன. அதை தொடர்ந்து சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அதை நாளில் வெளியான வர்ஷங்களுக்கு சேஷம் திரைப்படமும் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் தற்போது ஐம்பூந்து கோடியை நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் தற்போது இந்த படம் 50 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை வினித் ஸ்ரீனிவாசன் இயக்க பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வசூலில் பட்டைய கிளப்பும் வர்ஷங்களுக்கு சேஷம்!ஹிருதயம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இணைந்துள்ள இந்த கூட்டணியில் உருவான இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல விருந்து படைத்துள்ளது. மேலும் இனிவரும் நாட்களிலும் இந்த படம் அதிக வசூலை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.

MUST READ