Homeசெய்திகள்சினிமாபாலிவுட்ல செட்டில் ஆன அட்லீ... அடுத்து 'தெறி' ரீமேக்... ஹீரோ யார் தெரியுமா!?

பாலிவுட்ல செட்டில் ஆன அட்லீ… அடுத்து ‘தெறி’ ரீமேக்… ஹீரோ யார் தெரியுமா!?

-

பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் தெறி திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக  இருப்பதாக கூறப்படுகிறது.

அட்லீ தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபல இயக்குனராக உருவெடுத்துள்ளார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

அட்லீ ‘ராஜா ராணி‘ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தை அடுத்து விஜய் உடன் கூட்டணி வைத்த தெறி படம் தான் அட்லீயை பெரிய மாஸ் இயக்குனராக உருவெடுக்கச் செய்தது.

விஜயின் சினிமா கேரியரில் தெறி படத்திற்கு முக்கிய இடம் உண்டு. மூன்று கெட்டப்புகளில் வந்து மாஸ் காட்டி இருந்தார் விஜய். நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களுக்கு அந்த படம் ட்ரீட் ஆக அமைந்தது. தற்போது அந்த படம் தொலைக்காட்சிகளில் வெளியிட்டால் கூட ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தெறி திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் வருண் தவான் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறாராம். மேலும் இயக்குனர் அட்லீயே அந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் செட்டிலாக அட்லீ பிளான் போட்ருக்காரு போலயே!

MUST READ