Homeசெய்திகள்சினிமாபேபி ஜான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் நட்சத்திரம்

பேபி ஜான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் நட்சத்திரம்

-

கோலிவுட் திரையுலகில் டாப் இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். இவரது இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் தெறி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அட்லீ இயக்கிய இப்படத்தில் விஜய் நாயகனாக நடித்திருந்தார். மேலும், சமந்தா, எமி ஜாக்சன் நாயகிகளாக நடித்திருந்தனர். மொட்டை ராஜேந்திரன், ராதிகா, சுனைனா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் போலீசாக நடித்திருப்பார். இத்திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. அண்மையில் தெறி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை தெறி படத்தை இயக்கிய அட்லீ தயாரிக்கிறார். இப்படத்தை கீ படத்தை இயக்கிய காலிஸ் இயக்குகிறார். படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேபி ஜான் படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானும், இயக்குநர் அட்லீயும் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், அவரை இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்துள்ளாராம். இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி திரைக்கு வருகிறது.

MUST READ