Homeசெய்திகள்சினிமாசத்யராஜ் - வசந்த் ரவி நடித்துள்ள வெப்பன்... முன்னோட்டத்திற்கு வரவேற்பு...

சத்யராஜ் – வசந்த் ரவி நடித்துள்ள வெப்பன்… முன்னோட்டத்திற்கு வரவேற்பு…

-

- Advertisement -
சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் வெப்பன் திரைப்படத்தின் ட்ரைலருக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஜெயிலர் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் வசந்த் ரவி. அதற்கு முன்பாக அஸ்வின்ஸ், நடுநிசி நாய்கள் என பல படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்திற்கு மகனாக நடித்த வசந்த் ரவிக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அண்மையில் அவரது நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. தற்போது வசந்த் ரவி வெப்பன் என்ற புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவருடன் இணைந்து, சத்யராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இதற்கு இசை அமைத்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது. கடந்தாண்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெப்பன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த டிரைலர் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. வெப்பன் திரைப்படம் வரும் மே 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ