Homeசெய்திகள்சினிமாவசந்த் ரவியின் அடுத்த படம்..... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு!

வசந்த் ரவியின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு!

-

வசந்த் ரவியின் அடுத்த படம்..... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு!பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து நற்பெயரைப் பெற்றவர் வசந்த ரவி. அதன் பிறகு இவர் நடித்த ராக்கி திரைப்படம் ஒரு வித்தியாசமான படமாக அமைந்து அதுவும் நற்பெயரைப் பெற்று கொடுத்தது. மேலும் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் மெயின் வில்லனாக நடித்திருந்தார் வசந்த் ரவி. சாதுவான முகத்துடன் அப்பாவி மகனாக நடித்தும், இடைவெளிக்கு பின்னர் வில்லத்தனத்திற்கு மாஸ்டர் மைண்டாக செயல்படுவதும் என கற்றுக்கொண்ட மொத்த வித்தையும் இறக்கி இருந்தார் வசந்த் ரவி. வசந்த் ரவியின் அடுத்த படம்..... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு!ஜெயிலர் படம் சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனால் படத்தில் நடித்த வசந்த் ரவிக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் வசந்த ரவி நடிக்கும் 7வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கான ஒரு பிரத்தியேக வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ ஒரு திரில்லர் பின்னணியில், ஆங்கில செய்தித்தாள்களின் ஸ்டைலில் வெளியாகியுள்ளது. எனவே இப்படம் ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பானியிலான படமாக இருக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் வசந்த் ரவி நடிக்கும் 7வது படத்தினை ஜே.எஸ்.எம் பிச்சர்ஸ் மற்றும் எம்பெரர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தில் சுனில், அனிகா சுரேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அஜ்மல்த்க்சீன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சபரிஷ் நந்தா இயக்கியுள்ளார்.

மேலும் வசந்த் ரவி சத்யராஜுடன் இணைந்து வெப்பன் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ