தெலுங்கு மட்டுமல்லாமல் பான் இந்தியா நடிகராகவும் வளர்ச்சி அடைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. தற்போது அவர் சமந்தா உடன் ‘குஷி’ படத்தில் நடித்து முடித்தார். சிவ நிர்வணா இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் கடந்த செப்ம்டபம் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் பட்டையை கிளப்பியது குஷி திரைப்படம்.
விஜய் தேவரகொண்டா அடுத்ததாக ‘ஜெர்ஸி’ படத்தின் இயக்குனர் கெளதம் தின்னுரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா உளவாளியாக நடிக்கிறார். படத்திற்கு ‘VD 12’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு பட பூஜையும் நடைபெற்றும் முடிந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் கதாநாயகி மாற்றப்பட்டுள்ளார். லீலாவுக்கு பதிலாக, ஷாக்சி நடிக்கிறார்.
இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்திற்கு ம்யூசிக் சென்சேஷன் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு அடைந்ததாகவும், இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒரு தொழிற்சாலையில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.